Thursday, 2 December 2021

விண்ணில் மிதக்கும் தங்கச் சுரங்கம்

                                விண்ணில் மிதக்கும் தங்கச் சுரங்கம் 



 சூரிய மண்டலம் உருவானபோது ஏற்பட்ட மோதலில் பல சிறுகோள்கள் பெரும் கிரகங்களிலிருந்து பிரிந்து உருவாகி மிதக்கத் தொடங்கின. அப்படி உருவான சிறுகோள்களில் ஒன்றே, சைக்கி 16 எனும் சிறுகோள். இந்தச் சிறுகோள் மார்ச் 17, 1852இல் அன்னிபாலே டி காஸ்பரிஸ் எனும் இத்தாலிய வானியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. அன்பின் கடவுளான ஈரோஸைத் திருமணம் செய்த சைக்கி எனும் கிரேக்கத் தேவதையின் பெயரை இந்தச் சிறுகோளுக்கு அவர் சூட்டினார். 200 கி.மீ. அகலம் கொண்ட இந்தச் சிறுகோள் 'கோல்ட்மைன் ஆஸ்டிராய்டு' என்று நாசாவால் குறிப்பிடப்படுகிறது. இந்த விண்வெளிச் சுரங்கம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது சூரிய மண்டலத்தில்தான் சுற்றி வருகிறது. உண்மையில், இது தங்கம், பல அரிய வகை உலோகங்கள் போன்றவற்றால் ஆன ஒரு பெரிய விண்வெளிப் பாறை. இந்தச் சிறுகோளில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் 750 கோடி கோடிக்கு மேல் என்று நாசா மதிப்பிட்டுள்ளது. பல விலைமதிப்பற்ற உலோகங்கள் நிறைந்திருப்பதால் அதன் ஒரு சிறு துண்டுகூடப் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கும் என்று நாசா கூறுகிறது. நாசாவின் கூற்றுப்படி, இந்த சைக்கி 16 (Psyche 16) சிறுகோள் பூமியிலிருந்து 32 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தச் சிறுகோள் தற்போது செவ்வாய், வியாழன் ஆகிய கோள்களின் சுற்றுப்பாதைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. நாசா விண்வெளி நிறுவனம் அதன் தோற்றத்தைக் கண்டுபிடிக்க 2026ஆம் ஆண்டுக்குள் 'சைக்கி 16' என்கிற பெயரில் ஒரு சிறுகோள் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. நாசாவின் திட்டத்தின்படி, வரும் 2026ஆம் ஆண்டில் சைக்கி சிறுகோளை ஆய்வு செய்ய ஒரு விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்படும். சைக்கி 16 சிறுகோளை, மல்டிஸ்பெக்ட்ரல் இமேஜர், காமா-ரே, நியூட்ரான் ஸ்பெக்ட்ரோமீட்டர், மேக்னெட்டோமீட்டர், ரேடியோ இன்ஸ்ட்ருமென்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி நாசா அனுப்பும் விண்கலம் ஆய்வு செய்யும். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்யாணி சுகத்மே இந்தத் திட்டத்தின் பேலோட் மேலாளராக இருக்கிறார். இவர் மும்பையில் வளர்ந்தவர். அவருடைய பெற்றோர் கணிதப் பேராசிரியர்கள். மும்பை ஐ.ஐ.டி.யில் படித்த அவர் தற்போது நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் பணிபுரிகிறார். சரியான, முறையான பகுப்பாய்வு ஆராய்ச்சி மூலம் இந்தச் சிறுகோள் பற்றிய துல்லியத் தகவலை இவருடைய தலைமையிலான விஞ்ஞானிகள் குழு கண்டுபிடிக்கும் என்று நாசாவுடன் சேர்ந்து நாமும் நம்புவோம். 

Tuesday, 2 November 2021

The Moon as Seen from Earth


 




New Moon  (அமாவாசை)

This is the invisible phase of the Moon, with the illuminated side of the Moon facing the Sun and the night side facing Earth. In this phase, the Moon is in the same part of the sky as the Sun and rises and sets with the Sun. Not only is the illuminated side facing away from the Earth, it’s also up during the day! Remember, in this phase, the Moon doesn’t usually pass directly between Earth and the Sun, due to the inclination of the Moon’s orbit. It only passes near the Sun from our perspective on Earth.

 

Waxing Crescent ( பிறை நிலா )

This silver sliver of a Moon occurs when the illuminated half of the Moon faces mostly away from Earth, with only a tiny portion visible to us from our planet. It grows daily as the Moon’s orbit carries the Moon’s dayside farther into view. Every day, the Moon rises a little bit later.

 

First Quarter ( முதல் காலாண்டு நிலவு )

The Moon is now a quarter of the way through its monthly journey and you see half of its illuminated side. People may casually call this a half moon, but remember, that’s not really what you’re witnessing in the sky. You’re seeing just a slice of the entire Moon ― half of the illuminated half. A first quarter moon rises around noon and sets around midnight. It’s high in the sky in the evening and makes for excellent viewing.

 

 Waxing Gibbous ( வளர்பிறை )

Now most of the Moon’s dayside has come into view, and the Moon appears brighter in the sky.

 

Full Moon ( முழு நிலவு )

This is as close as we come to seeing the Sun’s illumination of the entire day side of the Moon (so, technically, this would be the real half moon). The Moon is opposite the Sun, as viewed from Earth, revealing the Moon’s dayside. A full moon rises around sunset and sets around sunrise. The Moon will appear full for a couple of days before it moves in

Waning Gibbous ( குறைந்த நிலவு )

As the Moon begins its journey back toward the Sun, the opposite side of the Moon now reflects the Moon’s light. The lighted side appears to shrink, but the Moon’s orbit is simply carrying it out of view from our perspective. The Moon rises later and later each night.

Last Quarter ( கடந்த காலாண்டு )

The Moon looks like it’s half illuminated from the perspective of Earth, but really you’re seeing half of the half of the Moon that’s illuminated by the Sun ― or a quarter. A last quarter moon, also known as a third quarter moon, rises around midnight and sets around noon.

 Waning Crescent ( முக்கால் பகுதி )

The Moon is nearly back to the point in its orbit where its dayside directly faces the Sun, and all that we see from our perspective is a thin curve.

 

 

 

 

Wednesday, 20 October 2021

TIRUPATTUR DISTRICT


                          மாவட்டம் பற்றி தோற்றம்

 திருப்பத்தூர் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருப்பத்தூர் ஆகும். திருப்பத்தூர் மாவட்டம், 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.தமிழ்நாட்டின் 36 ஆவது மாவட்டமாக, இம்மாவட்டத்தை 28 நவம்பர் 2019 அன்று தமிழக முதல்வர் முறைப்படி திருப்பத்தூரில் துவக்கி வைத்தார். நிர்வாக அலகுகள் திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய இரு கோட்டங்களையும், திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, மற்றும் ஆம்பூர் ஆகிய நான்கு வட்டங்களையும், 195 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது., 208 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய நான்கு நகராட்சிகளும், ஆலங்காயம், நாட்றாம்பள்ளி, உதயேந்திரம் ஆகிய மூன்று பேரூராட்சிகளும் உள்ளன. அமைவிடம் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் ஆந்திர பிரதேசம், கர்நாடக எல்லையோர நகரங்களுடன் சாலை வழி இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் தடம் 4 ( திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் – சென்னை ), 46 ( பெங்களூரு – சென்னை ). கனிமங்கள் மற்றும் சுரங்கம் கனிம வளம் நிறைந்த மாவட்டம், செம்மண், செங்கல் களிமண் போன்ற கனிமங்களும் இந்த மாவட்டத்தில் காணப்படுகின்றன. தொழில்கள் திருப்பத்தூர் தென்னிந்தியாவின் ஒரு தொழில்துறை மையமாகும். தோல் மற்றும் தோல் பொருட்கள் காலணிகள், ஆடைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்யப்படுகிறது பல பெரிய மற்றும் நடுத்தர தோல் தொழில்கள் உள்ளன. <

Friday, 17 September 2021

செவ்வாய்

 

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஆண்டின் சில நாட்கள் மட்டும் உப்பு நீர் உருவாகிறது: அமெரிக்க ஆய்வில் புதிய தகவல்

 


வாஷிங்டன்

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஆண்டின் சில நாட்கள் மட்டும் உப்பு நீர் உருவாக வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கிரக அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றம் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தினர்.

 

இந்த ஆய்வின் முடிவுகள் வானியற்பியல் இதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் உருவாவது மிகவும் கடினம். குளிர் காலத்தில் கிரகத்தின் மேற்பரப்பில் உருவாகும் பனி வெப்பசூழ்நிலைக்கு வந்து திரவமாவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பாக வளிமண்டலத்தில் விரைவாகக் கரைந்துவிடும் என்பதே இதற்கு காரணமாகும். செவ்வாய் கிரகத்தின் வளிமண்டல அழுத்தம் நீர் மூலக்கூறுகளின் (எச்2) அழுத்தத்தை ஒத்துள்ளது. இது நிலப்பரப்பில் திரவ நீர் இருக்க தேவையான அளவை விட குறைந்த அழுத்தமாகும். கிரகத்தில் ஏராளமான குளிர் பனி நிறைந்த பகுதிகள் மற்றும் ஏராளமான சூடான பனி பகுதிகள் உள்ளன.

வெப்பநிலை காரணமாக பனிக்கட்டிஉருகும் இடத்திற்கு மேலே இருக்கும் பகுதிகள் இனிமையான (மிதமான வெப்பநிலை) இடமாகும். ஆனால், அதன் இருப்பை துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த இடத்தில்தான் திரவ நீர் உருவாகிறது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நடு அட்ச ரேகைகளில் அமர்ந்திருக்கும் ஒரு பாறை குளிர்காலத்தில் ஒரு நிழலை கொண்டுள்ளது. குளிர்காலத்தில் அந்த கற்பாறைக்கு பின்னால் விழும் நிழல் பகுதியில் நீர் பனி குவிந்து கிடக்கிறது. அதில் சூரிய வெளிச்சம் படும்போது ​​பனி திடீரென்று வெப்பமடைகிறது.

அதன் விரிவான மாதிரி கணக்கீடுகளில், கிரகத்தில் காலையில் மைனஸ்128 டிகிரி செல்சியஸ் இருந்த வெப்பநிலை மதியத்துக்குள் மைனஸ் 10 டிகிரி செல்சியஸாக உயர்கிறது. இது ஒரு நாளில் கால் பகுதி நேரத்தில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றமாகும்.

ஆனால், குறுகிய காலத்தில், உறைபனி அனைத்தும் கரைந்து வளிமண்டலத்திற்கு செல்லவில்லை. இதனால், அப்பகுதியில் இருக்கும் நீரானது உப்பு கரைசலாக இருக்கலாம். ஏனென்றால் உப்பு நிறைந்த தரையில், நீர் பனி மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உருகிவிடும்.பனி அனைத்தும் திரவமாக அல்லது நீராவியாக மாறும் வரை உப்புநீர் இருக்கிறது. இந்த நிகழ்வு நடந்து முடிந்து, அடுத்த செவ்வாய் ஆண்டில் (687 நாட்கள்), இதே செயல்முறை மீண்டும் நிகழ்கிறது.

கற்பாறைகளுக்குப் பின்னால் இருக்கும் நிழல் பகுதிகள் குளிர்காலத்தில் மிகவும் குளிராக இருப்பதால், அங்கு நீர் உறைபனி மற்றும் கார்பன் டைஆக்சைடு நிறைந்த பனியும் உருவாகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.