இளமை
1730-ஆம் ஆண்டு, இராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாகப்
பிறந்தார் வேலுநாச்சியார். ஆண் வாரிசு போல வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி
பெற்றார்;
பல மொழிகள்
கற்றார். 1746-இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத்தேவருக்கு மனைவியானார்.
ஆங்கிலேயர்
படையெடுப்பு
1772-இல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச்
சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்தப் படையெடுப்பை எதிர்க்க
நினைத்த வேலுநாச்சியார் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது
மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்புப் பற்றிப் பேசி விளக்கினார். வேலு
நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார்.[2] ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி
முகாமிட்டு வாழ்ந்து வந்தார். மருது சகோதரர்களின் பெரும் முயற்சியினால் சிவகங்கை
மக்களை ஒன்று திரட்டி ஓர் எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது
சகோதரர்களே இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.[3]
ஆங்கிலேயர்களின்
சட்டதிருத்தம்
ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை
(அரசாங்கத்தை) தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய
கம்பெனியின் அவகாசியிலிக்
கொள்கை [4] தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்பு, சிவகங்கையின் ஆட்சி அதிகாரம் மகள் வெள்ளச்சி நாச்சியார் வசம் பிறகு அவர் இறந்து போன
பின்னர் அவர் கணவர் வேங்கன் பெரிய
உடையாத் தேவர் ஆட்சியில் மருது சகோதர்கள் தலைமையில்
சிறப்பாக ஆட்சி நடத்தினர். மேலும், தங்களது இறப்பு வரையிலும் சிவகங்கையைச் சிறப்பான கட்டமைப்போடு காத்து வந்தனர்.
[1780- ஆண்டு ஜூன் மாதம் மருதுபாண்டியர் தலைமையில்
ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும்,
பீரங்கிப்படை
ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை வைகை ஆற்றின் வழியில் சோழவந்தானையும், பிறகு சிலைமானையும், அதன் தொடர்ச்சியாக திருப்புவனம், முத்தனேந்தல்,நகரங்களை வென்ற பிறகு,
கடைசி யுத்தமாக
மானாமதுரை நகரத்தில் போர் பயிற்சி பெறாத மக்களின் துணைகொண்டு அந்நிய பரங்கியர்களை
வெற்றிக்கொண்டனர். அதன் பிறகு இராணியின் தோரணையோடு, இராணி வேலுநாச்சியார் சிவிகையின் மூலம் படைவீரர்கள் புடை சூழ விழாக்கோலம்
பூண்ட சிவகங்கையினுள் மருதுபாண்டியர் முன்வர வலம் வந்தனர்
வேலு நாச்சியார், அதன் பிறகு சிவகங்கை சீமையின் முதல் இராணியாக
மருதுபாண்டியர்களால் முடிசூட்டப்பட்டார்.
இறுதி நாட்கள்
1793-இல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால்
நாச்சியாருக்குத் துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி
நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார். இதன் தொடர்ச்சியாக
சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் பட்டியல் கீழே உள்ளது.
வேலுநாச்சியார்
மணிமண்டபம்
சிவகங்கை மாவட்டம், சூரக்குளம் கிராமத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீர மங்கை வேலு நாச்சியார் நினைவு மண்டபம் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, 18. சூலை 2014 அன்று தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார