ப்ளூ பெர்ரி
பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்
நம்மில் சிலருக்கு நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதற்கு ஆசை இருக்கும். அவ்வாறு
இருப்பவர்கள் ப்ளூபெர்ரி பழத்தை தினமும் எடுத்துக்கொண்டால் உங்களுக்கு நீண்ட
ஆரோக்கியம் கிடைக்கும். நீங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருந்தால்
மருத்துவமனைக்கு செல்ல அவசியம் இருக்காது.
கொத்துக்கொத்தாக
திராட்சை பழங்கள் இருப்பது போல், அடர் ஊதா நிறத்தில்
காணப்படுவதுதான் ப்ளூ பெர்ரி பழங்கள். இதனை அப்படியே சாப்பிடலாம். அல்லது
சாறெடுத்து சாப்பிடலாம். இரண்டுமே உடலுக்கு நன்மைதான்.
ஞாபக மறதியை போக்கும்
நமக்கு வயதான
காலத்தில் சிலருக்கு ஞாபக மறதி வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
சிலருக்கு இளமையிலேயே ஞாபக மறதி அதிகமாக இருக்கும். இதனை போக்க தினமும் ப்ளூபெர்ரி
பழத்தை எடுத்துக் கொண்டால் இது மூளையில் உள்ள செல்களை ஆரோக்கியமாக வைத்து ஞாபகமறதி
நோய் வராமல் எதிர்க்கிறது.
புற்றுநோய் இதய நோய்
தடுக்கும்
ஒரு கப் ப்ளூபெர்ரி
பழத்தை சாப்பிடுவதாலும் உடலுக்கு வைட்டமின் ஈ சத்தும் மற்றும் வைட்டமின் சி
சத்தும் உடலுக்கு கிடைத்துவிடுகின்றன. வைட்டமின் சி மாத்திரை
எடுத்துக் கொண்டால் 200 அளவுதான் சக்தி கிடைக்கும் ஆனால் ப்ளூபெர்ரி பழத்தை
எடுத்துக் கொண்டால்பல மடங்கு வைட்டமின் சத்து உடலுக்கு கிடைக்கும். இது புற்று நோய்
மற்றும் இதய நோய் சம்பந்தமான நோய்களை உருவாக்கும் கிருமிகளை அழிக்கும். மேலும் உடலில் உள்ள தேவையற்ற
கிருமிகளை அழித்து விடுவதால் தோல் இளமையாக காட்சியளிக்கும்.
உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்படும் அழுத்தத்தை
வைட்டமின் சி சத்து போக்குகிறது. இப்பழத்தில் இருக்கும் 1200 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து, நச்சுக் கிருமிகளை அழித்து உடலுக்கு
ஆரோக்கியத்தை தருகிறது. தினமும் ஒரு கோப்பை (100 கிராம்) ப்ளூ பெர்ரி பழம் சாப்பிட்டுவந்தால்
உடலுக்கு எந்தவிதத் தீங்கும் வராது. உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து
கிடைக்கும்.
மார்பக புற்றுநோய் தடுக்கும்
இதில் உள்ள வைட்டமின் சி சத்தும் வைட்டமின் ஈ சத்தும்
ரத்தத்தில் கலந்து மார்பக புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை அழித்து இரத்தத்தை சுத்தமாக்குகிறது.
இதனால் மார்பகப் புற்றுநோய் உண்டாகாமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும்.
சர்க்கரை நோய்
வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ரத்தத்தில் கலந்து
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைத்து சர்க்கரை நோயினை குணப்படுத்துகிறது.
ஆகையால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை தினமும் எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய்
கட்டுக்குள் இருக்கும்.
சிறுநீர்ப்பை அழற்சி பெரும்பாலும் ஆண்களைவிட பெண்களைத்தான்
அதிகமாக தாக்குகிறது. உணவு செரிமான அடிகுழாய் ஈ கோலி எனும் நுண்ணுயிரி வாழ்ந்து
வருகிறது. இந்த பாக்டீரியா பெண்களின் சிறுநீர்ப்பையில் வேகமாக பரவிவிடுகிறது.
சிறுநீர்ப்பாதையில் தங்கியிருக்கும் இந்த பாக்டீரியாவை
முழுமையாக அளிக்கும் சத்து ப்ளூபெர்ரி பழத்திற்கு இருக்கிறது என்பது இஸ்ரேல்
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சிறுநீர்ப்பை
அழற்சி உள்ளவர்கள் ப்ளூபெர்ரி பழத்தினை சாறெடுத்து அடிக்கடி சாப்பிட்டு வர அலர்ஜி
குணமாகும்.
No comments:
Post a Comment