கோட்டைகள்
பகைவர்களிடமிருந்து மக்களைக்
காப்பாற்ற பெரும் மதிற்சுவர்கள் அரசர்களால் பண்டு கட்டப்பட்டன. அவை கோட்டைகள்
எனப்படும். இக்கோட்டைக்குள்ளே நகரங்களும், ஊர்களும்
அமைந்திருந்தன. இக்கோட்டைகள் நீண்டும், உயரமாகவும்
வடிவமைக்கப் பட்டவை. கோட்டைகள் அரசர்களின் வலிமையை நிர்ணயிக்கும் திறனாக
அமைந்திருந்தன. மேலும் எல்லைப்புறங்களில் காடுகளில் 'படைகள்' தங்குவதற்காக
கோட்டைகள் அமைக்கப்பட்டன. அவை படைப்பற்று அல்லது படைவீடு எனப்படும். இக்கோட்டைகள்
செலவுக்காக மக்களிடம் "கோட்டைப் பணம்" என்று வரி வசூலிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பல 'கோட்டைகள்' முக்கியத்துவம் பெற்றிருந்தன.
தமிழர் கோட்டைகள் 4 வகைப்படும். அவை 1. தரையில்
கட்டப்பட்டவை,
2. தண்ணீரால் சூழப்பட்டவை, 3. மலைமீது கட்டப்பட்டவை, 4. காடுகளுக்கு இடையில் கட்டப்பட்டவை ஆகியவையாகும்.
பலதரப்பட்ட கோட்டைகள் தமிழகம் முழுவதும் கட்டப்பட்டு இருந்தன.
சிற்றரசர்களின் கோட்டைகள்
தமிழகத்தின் சிறு சிறு பகுதிகளை ஆண்டு
வந்த குறுநில மன்னர்களின் கோட்டைகளுள் இரண்யவர்மன் கோட்டை, விளாங்குடி, முள்ளிக்குப்பம், உதச்சிக் கோட்டை, மேலூர், காரமடை ஆகியன குறிப்பிடத்தக்கன.
பாளையக்காரர்களின் கோட்டைகள்
விசயநகரர்-நாயக்கர் காலத்தில்
நிர்வாகப்பிரிவுளுள் ஒன்றான 72 பாளையப்
பட்டுக்காரர்களும் கோட்டைகளைக் கட்டியுள்ளனர். அவற்றுள் பாஞ்சாலக்குறிச்சி, சிவகிரி, பேருரையூர், போடி நாயக்கனூர், மருதூர், வடகரை, நெய்க்காரப்பட்டி, நெல்கட்டும் செவ்வல், வெங்கலக்
குறிச்சிக் கோட்டை, ஆவுடையார்புரம்
கோட்டை, வாசுதேவ நல்லூர், பாளயங் கோட்டை, களக்காடு, தலைவன் கோட்டை, திருவில்லிப்புத்துர், திண்டுக்கல், கொல்லங்கொண்டான்
ஆகியன குறிப்பிடத்தக்கன.
ஐரோப்பியர்களின் கோட்டைகள்/
சேதுநாட்டுக் கோட்டைகள்
ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்ட போது
பல கோட்டைகளை கட்டினர். அக்கோட்டைகளில் தங்களின் ஆட்சியதிகாரத்தை நிறுவினர்.
ஸ்ரீரங்கப்பட்டணம், சதுரங்கப்பட்டினம், ஓசூர் கோட்டை, பழவேற்காடு, பூந்தமல்லிக் கோட்டை, சென்னை
செயின்ட் ஜார்ஜ் கோட்டை, தியாக
துருக்கம், புதுச்சேரி கோட்டை, வில்லியனுர், அரியாங்குப்பம், செயின்டேவிட் கோட்டை, புவனகிரி, தேவீ கோட்டை, காரைக்கால்
கோட்டை, தரங்கம்பாடி, உதயகிரி கோட்டை, தாராபுரம், வட்டக்கோட்டை, குளச்சல்
கோட்டை.திப்புசுல்தான் கோட்டை, கோவர்
கோட்டை, ஆண்டிக்கரைக் கோட்டை, பொட்டநேரில் கோட்டை, கோட்டையூர், நாமக்கல் கோட்டை, சேலம்
கோட்டை, கிருஷ்ணகிரி, சங்ககிரி, கள்ளக்குறிச்சி, ஆரணி, எலவானாசூர்க்
கோட்டை, வந்தவாசல் கோட்டை, ஆற்க்காடு, துத்தப்பட்டு, கோவளம் கோட்டை, எழும்பூர், வழுதாவூர், கருங்குழி, ஆலம்பறைக் கோட்டை, கோட்டக்குப்பம், கிள்ளை, வெள்ளப்பட்டி, இராமநாதபுரம், திருப்புல்லானை, அழகன்குளம், பாம்பன்
கோட்டை, சிவகங்கை கவுண்டன் கோட்டை, கமுதி, திருப்பத்துர், சங்கரபுரக் கோட்டை, உறுதிக்
கோட்டை, ஓடாநிலைக் கோட்டை, நிலக்கோட்டை, இராஜதானிக்
கோட்டை, லிங்கப்ப நாயக்கன் கோட்டை, கைத்தியன் கோட்டை, வேடசந்துர், திருவண்ணாமலை முத்தால் நாயக்கர் துர்கம், வடமதுரைக் கோட்டை, சித்தியன்
கோட்டை, வேல்வார் கோட்டை, பிள்ளைக் கோட்டை, நத்தம், தேவ கோட்டை, ஸ்ரீ
பாலக் கோட்டை.
தமிழகத்தில் எண்ணற்றக் கோட்டைகள்
அழிந்துவிட்டன. இருப்பினும் அதனுடைய சிதைவு எச்சங்களாக தொல்லியல் சின்னங்களுள்
ஒன்றாக பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அதியமான் கோட்டை ஆத்தூர் கோட்டை
ஆற்காடு நவாபு கோட்டை
தரங்கம்பாடிக் கோட்டை
No comments:
Post a Comment