Thursday, 5 September 2024

இயற்கை உணவுகளில் இருக்கும் நன்மைகள்

இயற்கை உணவுகளில் இருக்கும் நன்மைகள் பரபரப்பான இந்த உலகத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் உண்மையில் ஆரோக்கியமானதா என்ற சந்தேகம் அனைவருக்குமே இருக்கிறது. நம் முன்னோர்களின் உணவு முறைக்கும், நம்முடைய உணவு முறைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளது. நம் முன்னோர்கள் பெரும்பாலும் இயற்கை உணவுகளையே தங்களின் பிரதான உணவாக கொண்டிருந்தனர் அதனால்தான் அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். இப்போது நமது தலைமுறையும் இயற்கை உணவுகளை நோக்கி திரும்பி கொண்டிருக்கிறது. பொதுவாக இயற்கை உணவுகளால் எந்த பாதிப்பும் இல்லை என்ற கருத்து உள்ளது. . இயற்கை உணவுகளால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம். இயற்கை உணவுகள் என்றால் என்ன? இயற்கை உணவுகள் என்பது தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகள், உரங்கள் மற்றும் பிற செயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தாமல் வளர்க்கப்படும் பயிர்களைக் குறிக்கிறது. கரிம வேளாண்மையின் கீழ் உள்ள விலங்குகள் கூட செயற்கை வளர்ச்சி ஹார்மோன்கள் அல்லது நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இல்லாத கரிம விநியோகத்துடன் உணவளிக்கப்படுகின்றன. இப்போது இயற்கை உணவுகளுக்கு என பல சிறப்பு கடைகளை நாம் பார்க்கலாம். இரசாயனங்கள் இல்லை வழக்கமான விவசாயத்தைப் போலல்லாமல், கரிம விவசாயிகள் தங்கள் உற்பத்திகளுக்கு செயற்கை உரங்கள், ரசாயன சேர்க்கைகள் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். எனவே, நீங்கள் உண்ணும் உணவில் உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பது இல்லை. மேலும் உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இதில் இருப்பதில்லை. சுற்றுசூழலுக்கு நல்லது இயற்கை வேளாண்மை என்பது நமது மோசமடைந்து வரும் சூழலுக்கு ஒரு வரமாகும். பயிரின் அளவை அதிகரிக்கும் நோக்கம் இல்லை என்பதால் இது மண் மற்றும் சுற்றுசூழலுக்கு நல்லது. இது நமது எதிர்கால தேவைக்கான தண்ணீரை சேமிக்கிறது. கரிம பண்ணைகளில், பயிர்களின் பன்முகத்தன்மை அதிகரித்துள்ளது. உயர் ஊட்டச்சத்து மதிப்புகள் வழக்கமான விவசாயத்துடன் ஒப்பிடுகையில் இயற்கை உணவு பொருட்களில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இயற்கை வேளாண்மை மண்ணின் ஆற்றலையும், பலன்களையும் அதிகரிக்கிறது. இந்த உணவுகளை சாப்பிடும்போது இந்த நன்மைகள் நம் உடலுக்கும் கிடைக்கிறது.

No comments:

Post a Comment