Monday, 28 February 2022

தமிழ் வளர்த்த சான்றோர்கள் ​

 

தமிழ் வளர்த்த சான்றோர்கள்

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பல அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தெலுங்கு, மராட்டியம், ஆங்கிலம் என பல நூற்றாண்டுகளாக பிறமொழி  ஆதிக்கத்தில் தொய்வுற்றிருந்த தமிழ்மொழியை மீட்டெடுத்து தமிழர்களைப் பெருமையுறச் செய்த தமிழறிஞர்கள் பலர். ஆய்வும் தொகுப்புமே இவர்களது  மூச்சு. இந்த தமிழ் வளர்த்த சான்றோர்களில் சிலரைப் பற்றி ஒரு சில வரிகள் இங்கே….

.வே.சாமிநாத அய்யர்

சென்னை மாநிலக் கல்லூரி எதிரே இன்னும் சிலையாக, ஓங்கி நின்று கொண்டிருக்கிறார் .வே.சாமிநாத அய்யர். அவர் மட்டும் இல்லை என்றால் எத்தனையோ இலக்கியங்கள் தமிழுக்கு கிட்டாமலேயே போயிருக்கும். “ஏடு காத்த ஏந்தல்என்று அவரைச் சிறப்பிக்கிறார்கள். பல்வேறு ஆசிரியர்களிடமும் திசிபுரம் மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடமும் பயின்ற .வே.சாமிநாத அய்யரின் முக்கியப் பணி சிந்தாமணி, சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, புறநானூறு, மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பாபாடல், பெருங்கதை முதலிய பழைய இலக்கியங்களை சுவடிகளில் இருந்து தொகுத்து, உரைகளைச் சரிபார்த்து தொகுத்து தமிழ் உலகத்திற்குத் தருவதற்காக தம் வாழ்வையே அர்ப்பணித்தார்.

பரிதிமாற் கலைஞர்

சூரிய நாராயண சாஸ்திரிகள் என்ற பெயரை பரிதிமாற் கலைஞராக மாற்றிக் கொண்ட தமிழறிஞர் வாழ்ந்ததென்னவோ 32 ஆண்டுகள்தான். அதற்குள் தமிழுக்கு அவர் செய்த தொண்டுகள் அளப்பரியவை. தமிழ்மொழியைஉயர்தனிச் செம்மொழிஎன்று முதன்முதலாக நிலை நாட்டியவர் இவர்தான். 1870ல் பிறந்த இவர் எம்.. தேர்வில் மாநில அளவில் முதலாவதாக தேறியவர். தனித்தமிழ் இயக்கத்துக்கு முன்பே தம் பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டவர். இவரதுதமிழ் மொழி வரலாறுமிக முக்கியமான ஆய்வு நூலாகும்.

தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்

தமிழ் ஆய்வு உலகில் தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஒரு புதிய நெறியை உருவாக்கியவர். ராபர்ட் கால்டுவெல்லுக்கு அடுத்தபடியாக திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வை வளம்பெற வளர்த்தவர் தொ.பொ.மீ. மொழியியல் துறையில் விரிவான மொழியியல் ஆய்வை ஏற்று வளர்த்தவர். இந்திய அறிஞர்கள் பங்கு பெற்ற அரங்குகளிலும், வெளிநாட்டு அறிஞர்கள் அரங்குகளிலும் தமிழ் பண்பாட்டுத் தூதுவராக பணியாற்றியவர். சமூகவியல், சைவ சித்தாந்தம், உளவியல், மொழியியல், வரலாறு, கல்வெட்டு, மூல பாட ஆய்வு என இவரது அக்கறைகளும் பங்களிப்பும் விரிந்தது. இலக்கியத் துறையில் இருப்பாக இருந்த இடங்களைத் தன்னுடைய பேரறிவால் திறனாய்வுப் பார்வையில் விளங்கச் செய்தவர் தொ.பொ.மீ. சிலப்பதிகாரத்திற்கு இவரைப் போன்று வேறு எவரும் திறனாய்வு எழுதியதில்லை.

  

தமிழ் வளர்த்த சான்றோர்கள்-பட்டியல்

   1)ஹென்றிக்ஸ் அடிகள் (Henriques) 1520-1600
  2)
தத்துவ போதகர் ( Robert de nobili) 1577-1656 (தமிழ் உரைநடைகளின் தந்தை)
 3)
வீரமாமுனிவர் (Constantine joseph beschi ) (8-11-1680 - 4-2- 1747)
                      (
தமிழ் அகராதிகளின் தந்தை)
4)
சீகன்பால்கு (1683-1719)
 5)
பெப்ரிஷியஸ்(1711-1796)
6)
இரேனியஸ் (1790-1836)
7)
ஹென்றி பவர் (1813 - 1885)
8)
பெர்ஷிவெல் 
9)
கால்டுவெல்
10)
ஜி.யூ. போப் 
 11)
தெ.போ.மீ. (தமிழ் மெழியியலின் தந்தை)
12)
ஆறுமுக நாவலர் (தற்கால தமிழ் உரைநடையின் தந்தை)(தமிழ் காவலர்)
13)
திரு.வி.கலியாண சுந்தரனார் (மென்றமிழ் உரைநடையின் முதல்வர்)
14)
.வே.சாமிநாத அய்யர் (தமிழ் தாத்தா)
15)
.வே.சு.அய்யர் (தமிழ் சிறுகதைகளின் தந்தை)
16)
புதுமை பித்தன் என்னும் சொ.விருத்தாச்சலம் (சிறுகதைகளின் மன்னன்)
17)
மௌனி (தமிழ் சிறுகதைகளின் திருமூலர்)
18)
மு.வரதராசனார்
19)
மறைமலை அடிகள்

 

No comments:

Post a Comment